×

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள “டெக்ஸ்டர்”

தனக்காக மற்றவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் காதலனுக்கு எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது என்று நினைக்கும் காதலியை, திடீரென்று ஒருவன் படுகொலை செய்துவிட்டு, அத்தகவலை காதலனுக்கு தெரிவிக்கிறான். பிறகு என்ன நடக்கிறது என்பதைச் சொல்லும் படம், ‘டெக்ஸ்டர்’. ராம் என்டர்டெயினர்ஸ் சார்பில் எஸ்.வி.பிரகாஷ், வி.என்.சார்வாக், என்.ஹர்ஷா ஆகியோர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரித்துள்ளனர்.

திரைக்கதை, வசனம் எழுதி சூரியன்.ஜி இயக்கியுள்ளார். சிவம் கதை எழுத, ஆதித்ய கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாத் விஜய் இசை அமைக்க, மோகன்ராஜ் பாடல்கள் எழுதியுள்ளார். ராஜீவ் கோவிந்த், யுக்தா பெர்வி, சித்தாரா விஜயன், ஹரீஷ் பெராடி, அபிஷேக் ஜோசப் ராஜ், ஷோபா பிரியா, பெஹ்மின், பர்ஹான், ஜான்வி, சினேகல், ஆதித்யன் நடித்துள்ளனர். குடகுமலை, கேஜிஎஃப், ஓசூர், வயநாடு ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

The post தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள “டெக்ஸ்டர்” appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ram Entertainment ,Prakash ,V. N.N. Charvac ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஒன்றிய அரசுக்கு எதிரான சோனம் வாங்சுக்கின் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ்