×

அனைத்து ஐசிசி தொடர்களிலும் இறுதிக்கு தகுதி இந்திய கேப்டனாக சாதித்த ரோகித்: உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை

துபாய்: துபாயில் நேற்று முன்தினம் நடந்த, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் கேப்டன் ரோகித் சர்மா மகத்தான சாதனையை அரங்கேற்றி உள்ளார். அவரது தலைமையின் கீழ், ஐசிசி நடத்தி வரும் சர்வதேச போட்டிகளான, ஒரு நாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் என அனைத்திலும் இந்தியா இறுதிப் போட்டியில் பங்கேற்றுள்ளது. இந்த சாதனைகளை ரோகித் வெறும் 3 ஆண்டுகளில் நிகழ்த்தி அசத்தி உள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தற்போது 5வது முறையாக மோதவுள்ளது. உலகின் எந்த அணியும் இத்தனை முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதே இல்லை. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை எம்.எஸ்.தோனியுடன் ரோகித் பகிர்ந்து கொள்வார். இதற்கு முன் 2013ல் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியா தோனி தலைமையில் வென்று சாம்பியன் ஆகி உள்ளது.கடந்த 2023ல் ரோகித் தலைமையிலான இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒரு நாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் பங்கேற்று, இரண்டிலும் ஆஸியிடம் தோற்க நேரிட்டது. 2025ல் டி20 இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்காவிடம் மோதிய இந்தியா அபார வெற்றி பெற்றது.

The post அனைத்து ஐசிசி தொடர்களிலும் இறுதிக்கு தகுதி இந்திய கேப்டனாக சாதித்த ரோகித்: உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை appeared first on Dinakaran.

Tags : Rohit ,ICC ,Dubai ,Champions Trophy ,Australia ,Rohit Sharma ,Dinakaran ,
× RELATED டூர் சென்ற நடிகர் காட்டில் மர்ம சாவு