- தேசிய மக்கள் நீதிமன்றம்
- மாவட்ட முதன்மை நீதிபதி சாய் சரவணன்
- நெல்லை
- நெல்லை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம்
- தின மலர்
தேசிய மக்கள் நீதிமன்றம் நெல்லை, மார்ச் 6: நெல்லையில் நாளை மறுநாள் (8ம் தேதி) தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சாய் சரவணன் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து நெல்லை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் கூறியிருப்பதாவது: 2025ம் ஆண்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 8ம் தேதி உச்சநீதிமன்றம் முதல் தாலுகா நீதிமன்றங்கள் வரை நடத்த மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், மாநில சட்டப் பணிகள் குழு ஆலோசனையின் படி, 2025ம் ஆண்டின் தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை மறுநாள் (8ம் தேதி) நெல்லை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 9 தாலுகாக்களில் நடத்தப்படுகிறது.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், குடும்ப வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், காசோலை வழக்குகள் போன்ற வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய வங்கி கடன் வழக்குகள் அனைத்தும் சமரச பேச்சுவார்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதை முன்னிட்டு நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் குழுவில் நாளை மறுநாள் (8ம் தேதி) காலை 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றத்தை நெல்லை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சாய் சரவணன் தொடங்கி வைக்கிறார். எனவே பொதுமக்கள் தங்கள் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பின் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சுமூகமான முறையில் தீர்வு காணலாம். பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு செயலாளர் தெரிவித்துள்ளார்.
The post நெல்லையில் நாளை மறுநாள் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி சாய் சரவணன் துவக்கி வைக்கிறார் நெல்லையில் நாளை மறுநாள் appeared first on Dinakaran.
