×

மார்த்தாண்டம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

மார்த்தாண்டம், மார்ச் 6: மார்த்தாண்டம் அருகே சிதறால் அம்பலக்கடை துண்டுவிளை வீடு பகுதியை சேர்ந்தவர் சிவன் பிள்ளை(67). அவரது மனைவி நிர்மலா(64). சம்பவத்தன்று நிர்மலா தனது மகன் சந்தோஷ் என்பவருடன் பைக்கில் திக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தார். திக்குறிச்சி சிவன் கோயில் அருகே சென்றபோது நிர்மலாவுக்கு திடீரேன மயக்கம் வந்ததால் அவர் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த நிர்மலாவை மகன் மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். எனினும் சிகிச்சை பலனின்றி நிர்மலா பரிதாபமாக இறந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மார்த்தாண்டம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Shivan Pillai ,Ambalakadai Tundhuvilai Veedu ,Nirmala ,Thikurichi ,Santosh ,Shiva temple… ,
× RELATED மார்த்தாண்டம் அருகே பைக்குகள் மோதல் விவசாயி பரிதாப சாவு