- வெர்கலம்பி பேரூராட்சி
- Kulasekaram
- கண்ணனூர் ஆரம்ப சுகாதார நிலையம்
- டாக்டர்
- ஜிஜி ஜெஸ்டஸ்
- ஐவின் மலர்
- சுகாதார ஆய்வாளர்
- குமார்
- காசநோய் ஆய்வாளர்...
- தின மலர்
குலசேகரம்,மார்ச் 6: கண்ணனூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் டாக்டர் ஜிஜி ஜெஸ்டஸ், ஆயுர்வேத மருத்துவர் ஐவின் மலர், சுகாதார ஆய்வாளர் குமார், காசநோய் ஆய்வாளர் விமலா, செவிலியர் ஜெனிபா, இடைநிலை சுகாதார பணியாளர்கள் ஷீஜா ஏஞ்சல் பனிமலர், மினி மோள் ஆகியோர் அடங்கிய குழுவினர் மருத்துவ பரிசோதனைகள் நடத்தினர். இந்த முகாமை வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங்குமார் தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மார்பகம், கர்ப்பபை , வாய் புற்றுநோய் கண்டறிதல் போன்ற பரிசோதனைகள் நடத்தப்பட்டது.
The post வேர்கிளம்பி பேரூராட்சியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் appeared first on Dinakaran.
