×

மனைவி, 2 குழந்தை சாவில் தேடப்பட்ட வங்கி ஊழியர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பெரிய மணலியை சேர்ந்தவர் பிரேம்ராஜ் (38). தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி மோகனப்பிரியா (34). மகள் பிரினித்தி (6), மகன் பிரினிராஜ் (2). நேற்று முன்தினம் பிரேம்ராஜின் மனைவி மோகனப்பிரியா, மகள் பிரினித்தி, மகன் பிரினிராஜ் ஆகிய 3 பேரும், வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி, மாயமான பிரேம்ராஜை தேடி வந்தனர். அவர் எழுதிய கடிதத்தில் ஆன்லைன் ஆப்பில், கடந்த ஒரு வாரத்தில் ரூ.50 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எங்களை மன்னித்து விடுங்கள் என எழுதியுள்ளார். இந்நிலையில், பிரேம்ராஜ் கரூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது, நேற்று மதியம் நாமக்கல் போலீசாருக்கு தெரிய வந்தது. பிரேத பரிசோதனையில் மோகனபிரியா தூக்கில் தற்கொலை செய்து கொண்டது உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

The post மனைவி, 2 குழந்தை சாவில் தேடப்பட்ட வங்கி ஊழியர் ரயிலில் பாய்ந்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Premraj ,Periya Manali ,Namakkal district ,Mohana Priya ,Prinithi ,Priniraj ,
× RELATED தரமான விதைகளையே பயன்படுத்த வேண்டும்