×

பணத்துக்கு ஆசைப்பட்டு பள்ளிக் குழந்தைகளைக் கடத்தும் ஹீரோ: காமெடி கலக்கல் “வா வரலாம் வா”

பணத்துக்கு ஆசைப்பட்டு பள்ளிக் குழந்தைகளைக் கடத்தும் ஹீரோவும், அவரது நண்பரும் அதில் வெற்றிபெற்று பணக்காரர்களாக உயர்ந்தார்களா, இல்லையா என்பதை காமெடியுடன் சொல்லும் படம், ‘வா வரலாம் வா’. பாலாஜி முருகதாஸ், மஹானா சஞ்சீவி, காயத்ரி ரெமா, ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சிங்கம்புலி, சரவண சுப்பையா, தீபா, வையாபுரி, ராமசாமி, கிரேன் மனோகர், ராஜேந்திரநாத், வாசு விக்ரம், திலீபன் நடிக்கின்றனர்.

கார்த்திக்ராஜா ஒளிப்பதிவு செய்ய, தேவா இசை அமைக்கிறார். காதல்மதி, கானா எட்வின் பாடல்கள் எழுதுகின்றனர். எஸ்.பி.ஆர் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி எல்.ஜி.ரவிசந்தர், எஸ்.பி.ஆர் இணைந்து இயக்குகின்றனர். மதுராந்தகம், மேல்மருவத்தூர், வேடவாக்கம், வேடந்தாங்கல் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.

The post பணத்துக்கு ஆசைப்பட்டு பள்ளிக் குழந்தைகளைக் கடத்தும் ஹீரோ: காமெடி கலக்கல் “வா வரலாம் வா” appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Balaji Murugadoss ,Mahana Sanjeevi ,Gayatri Rema ,Redin Kingsley ,Mime Gopi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கும்பாரி: விமர்சனம்