×

மாதாந்திர பராமரிப்பு பணி சாலை தடுப்புச்சுவர்களில் வர்ணம் தீட்டும் பணி தீவிரம்

 

தா.பழூர், மார்ச். 5: மாதாந்திர பராமரிப்பு பணியாக சாலையில் உள்ள தடுப்பு சுவர்களில் வர்ண்ணம் தீட்டப்படுகிறது. அரியலூர் மாவட்ட தா.பழூர் – கும்பகோணம் சாலையில் உள்ள வேகத்தடை மற்றும் தடுப்பு சுவர்கள் உள்ளது. இதை வாகன ஓட்டிகளுக்கு காட்டும் விதமாக வண்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது. அரியலூர் கோட்ட பொறியாளர் உத்தரவின் பேரில் சாலை பணியாளர்கள் மூலம் தா.பழூர் – கும்பகோணம் சாலையில் மதனத்தூர் கொள்ளிடம் பாலம் வரை சாலையில் உள்ள வேகத்தடை மற்றும் தடுப்புச் சுவர்களில் பகுதிகளில் வண்ணம் தீட்டும் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் உள்ள மின் கம்பங்கள் தடுப்பு சுவர்களில் வர்ண்ணம் தீட்டும் பணி நடைபெற்றது. வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பயணத்தின் போது மரங்கள் மற்றும் தடுப்பு சுவர்கள் இருப்பதை காட்டும் விதமாக இந்த வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. தற்போது ஜெயங்கொண்டம் – கும்பகோணம் செல்லும் சாலையில் மதனத்தூர் கொள்ளிடம் பாலம் வரை இருபுறங்களிலும் வண்ணம் தீட்டும் பணியில் சாலைப்பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

The post மாதாந்திர பராமரிப்பு பணி சாலை தடுப்புச்சுவர்களில் வர்ணம் தீட்டும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Tha.Pazhur ,Kumbakonam road ,Ariyalur district ,Dinakaran ,
× RELATED வேம்புகுடியில் வடபத்திர காளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா