கம்பம், மார்ச் 5: கம்பத்தில் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர் கைது செய்யப்பட்டார். கம்பத்தில் பள்ளி மாணவர்களுக்கு மர்ம நபர்கள் கஞ்சா விற்பனை செய்வவதாவும் இதனால் மாணவர்கள் போதை பழக்கத்தால் பாதிக்கப்படுவதாகவும் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் அரசு கள்ளர் பள்ளியை சுற்றி தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக அப்பகுதியில் சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து சோதனை மேற்கொண்டனர். அவரிடம் 100 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கள்ளர் பள்ளி தெருவைச் சேர்ந்த சத்தியராஜ் என்பதும் கஞ்சாவை விலைக்கு வாங்கி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. மேலும் அவர் மீது கஞ்சா வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர் கைது appeared first on Dinakaran.