- மாதவி
- மும்பை உயர் நீதிமன்றம்
- மும்பை
- மும்பை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்
- செபி
- மாதவி புரி புச்
- தின மலர்
மும்பை: செபி சட்ட விதிகளுக்குப் புறம்பாக பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தை பட்டியலிட்டது தொடர்பாக, செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் உட்பட 6 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், இது தொடர்பாக மாதபி உட்பட 6 பேர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்ய ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டது.
இதை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மாதபி புரி புச் மற்றும் மும்பை பங்குச்சந்தை நிர்வாக இயக்குநர் சுந்தரராமன் ராமமூர்த்தி, மும்பை பங்குச்சந்தையின் அப்போதைய தலைவர் பிரமோத் அகர்வால் மற்றும் செபியின் முழுநேர உறுப்பினர்கள் அஸ்வனி பாட்டியா, அனந்த் நாராயண், கம்லேஷ் சந்திர வர்ஷிணி ஆகியோர் மேல் முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஷிவ்குமார் திகே முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செபி அதிகாரிகள் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்றம் தனது உத்தரவை பிறப்பிக்கும் போது எதையும் கவனத்தில் கொள்ளவில்லை என்று வாதிட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த மனுதாரர் ஸ்ரீவஸ்தவா, இந்த மனுக்களுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரினார்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி ஷிவ்குமார் திகே சிறப்பு நீதிமன்றம் எதையும் ஆராயாமல் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது என்று கருத்து தெரிவித்தார். எனவே வழக்கு அடுத்த முறை விசாரணைக்கு வரும் வரை சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதி, புகார்தாரர் தரப்பு பதிலளிக்க 4 வாரங்கள் அவகாசம் அளித்தும் உத்தரவிட்டார்.
The post பங்குச்சந்தை முறைகேடு மாதபி மீது வழக்குப்பதிய 4 வாரம் இடைக்கால தடை: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
