×

சமாஜ்வாடி எம்எல்ஏ மகன் மீது வழக்கு

பனாஜி: மகாராஷ்டிரா சமாஜ்வாடி எம்எல்ஏ அபு அஸ்மி, முகாலய பேரரசர் அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அபு அஸ்மியின் மகனும் நடிகை ஆயிஷா டாக்கியாவின் கணவருமான அபு பர்ஹான் ஆஸ்மி கோவாவில் சூப்பர்மார்க்கெட் ஒன்றில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அபு பர்ஹான் தன்னிடம் துப்பாக்கி இருப்பதாகவும், சுட்டுவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகின்றது. இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு குறித்து கலன்குட்டா காவல்நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கி விரைந்த போலீசார் இரு தரப்பினரையும் காவல்நிலையத்து அழைத்து வந்தனர். இதனையடுத்து அபு பர்ஹான் அசாமி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

The post சமாஜ்வாடி எம்எல்ஏ மகன் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Samajwadi MLA ,Maharashtra ,Abu Azmi ,Mughal Emperor ,Aurangzeb ,Ayesha Takia ,Abu Burhan Azmi ,
× RELATED புதிய தேசிய கல்வி கொள்கையை...