- முல்லைப் பெரியாறு கண்காணிப்புக் குழு
- புது தில்லி
- தேசிய அணை பாதுகாப்பு ஆணையம்
- அனில் ஜெயின்
- யூனியன் அரசு
- முல்லைப் பெரியாறு
- தின மலர்
புதுடெல்லி: தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் தரப்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட மேற்பார்வை குழுவின் முதல் கூட்டம் 22ம் தேதி நடக்கிறது. மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு மற்றும் கேரள அதிகாரிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
இடில் தமிழ்நாடு தரப்பில் மேற்பார்வை குழுவில் இடம் பெற்றுள்ள நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா மற்றும் காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிர மணியன் ஆகியோர் பங்கேற்க உள்ளார்கள். கேரளா சார்பாக அம்மாநில நீர்வளத்துறை செயலாளர் மற்றும் தலைமை பொறியாளர் ஆகியோ கலந்து கொள்வார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழு 22ம் தேதி கூடுகிறது appeared first on Dinakaran.