- பஞ்சாப் அரசு
- சண்டிகர்
- பாக்கிஸ்தான்
- பஞ்சாப்
- இந்தியா-பாக்கிஸ்தான்
- மொஹாலி, பஞ்சாப்
- நிதி அமைச்சர்
- சீமா
- தின மலர்
சண்டிகர்: இந்திய – பாகிஸ்தான் எல்லை வழியே பாகிஸ்தானிலிருந்து டிரோன்கள் மூலம் பஞ்சாப் மாநிலத்துக்கு போதைப்பொருள், ஆயுதங்களை கடத்துவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப்பின் மொஹாலியில் டிரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம் குறித்த செயல்விளக்க கூட்டம் நடைபெற்றது. இதனை பஞ்சாப் நிதியமைச்சர் சீமா மற்றும் கேபினட் அமைச்சர் அமன் அரோரா ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமன் அரோரா, “எல்லைக்கு அப்பால் இருந்து போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் கடத்தி வரப்படுவதை தடுப்பது இந்திய அரசின், குறிப்பாக எல்லை பாதுகாப்பு படையின் முதன்மை பொறுப்பு. ஆனால் இதில் கடந்த ஆண்டுகளில் எல்லை பாதுகாப்பு படை போதிய வெற்றி பெறவில்லை.
பஞ்சாப்பை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற அரசு உறுதிப்பூண்டுள்ளது. எனவே பஞ்சாப் எல்லை வழியாக போதைப்பொருள், வெடிமருந்துகள், ஆயுதங்கள் கடத்தலை தடுக்க டிரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்த பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது” என்று கூறினார்.
The post பாகிஸ்தானில் இருந்து டிரோனில் போதைப்பொருள் கடத்துவதை தடுக்க நவீன தொழில்நுட்பம்: பஞ்சாப் அரசு தகவல் appeared first on Dinakaran.