- Karungal
- பேரூராட்சி நிர்வாகம்
- கருங்கல் தேர்ந்தெடுக்கப்பட்ட டவுன் பஞ்சாயத்து
- டவுன் பஞ்சாயத்து
- தின மலர்
கருங்கல், மார்ச் 5: கருங்கல் பேருந்து நிலையம் கட்டப்பட்டு பல வருடங்கள் கடந்து விட்டதால் கருங்கல் தேர்வுநிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதிதாக பேருந்து நிலையம் கட்ட ரூ.5.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதையடுத்து பேருந்து நிலைய பழைய கட்டுமானம் இடிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக பேருந்து நிலைய கடைகளுக்கு வழங்கப்பட்ட மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டது. பேருந்துகள் நிறுத்துவதற்கு மாற்று ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பேருந்துகள் வந்து செல்ல பணிமனை நிர்வாகத்துடன் ஆலோசனை பெற்று பேருந்துகள் வெளிப்புற பகுதிகளில் நிறுத்தி வைத்து, பேருந்து நிலைய பணி ஒரு வார காலத்திற்குள் ஆரம்பிக்கப்பட உள்ளது என்று கருங்கல் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் சத்தியதாஸ் தெரிவித்துள்ளார்.
The post கருங்கல் புதிய பேருந்து நிலைய பணி 1 வாரத்தில் தொடங்கும் பேரூராட்சி நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.