×

கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை காவல் நிலையத்தில் உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு

கடலூர், மார்ச் 5: தோழிகளுடன் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து உறவினர்கள் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள அதியமான்குப்பத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் மகள் மதியரசி(18). இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு வீட்டில் தனது தோழிகளுடன் தங்கி தினந்தோறும் கல்லூரிக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மதியரசியுடன் தங்கி இருந்த தோழிகள் அனைவரும் கல்லூரிக்கு சென்று விட்டனர். ஆனால் மதியரசி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மதியரசியின் தோழிகள் கல்லூரிக்கு சென்று மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மதியரசி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மதியரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து மதியரசி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த மதியரசியின் உறவினர்கள் நேற்று காலை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மதியரசியின் உறவினர்கள் கூறுகையில், மதியரசியின் சாவில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அவர் தற்கொலை செய்யும் அளவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து போலீசார், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறினர். இதன் பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை காவல் நிலையத்தில் உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Cuddalore Pudunagar police station ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் பணம் மற்றும்...