×

குமாரகோவில் என்.ஐ கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தக்கலை, மார்ச் 5 : குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. நிகழ்வுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் இரா. மாரிமுத்து தலைமை வகித்தார். நூருல் இஸ்லாம் பல்கலை கழக இணை துணை வேந்தர் ஜனார்த்தனன், நூருல் இஸ்லாம் பல்கலை கழக இணை துணை வேந்தர் சாஜின் நற்குணம் ஆகியோர் விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தனர். நூருல் இஸ்லாம் கல்வி குழும செயலாளர் டாக்டர் ஏபி மஜீத்கான் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ஜெயராஜ் மற்றும் கல்லூரி துறை சார்ந்த பேராசிரியர்கள் செய்திருந்தார்கள். உடற்கல்வி இயக்குநர்கள் தர்மராஜ், ராஜபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post குமாரகோவில் என்.ஐ கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Kumarakovil ,NI Arts and Science ,College ,Thakkalai ,Kumarakovil Nurul ,Islam Arts and Science College ,Dr. ,I. Marimuthu ,Nurul Islam University ,Associate ,Vice Chancellor ,Janardhanan ,Nurul… ,Kumarakovil NI ,Arts ,Science ,
× RELATED நாமக்கலில் சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலி