×

காரையாறில் வீட்டில் தீப்பற்றியதில் ₹50 ஆயிரம் பொருட்கள் சேதம்

விகேபுரம், மார்ச் 5: பாபநாசம் மேலணை காரையார் குச்சில்காடு பகுதியில் குமார் என்பவரது வீட்டில் திடீரென தீப்பற்றியதில் அங்கிருந்த ₹ 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின. நெல்லை மாவட்டம், பாபநாசம் அடுத்த மேலணை காரையாறு குச்சில்காடு பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர் மகன் குமார். இவரது வீட்டில் வழக்கம்போல் நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் சமையல் செய்துகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது. மேலும் தீயானது மளமளவென வீடு முழுவதும் பரவியது. இதில் வீட்டில் இருந்த ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பேங்க் புத்தகம் மற்றும் 50 ஆயிரம் மதிப்புள்ள துணிகள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.

The post காரையாறில் வீட்டில் தீப்பற்றியதில் ₹50 ஆயிரம் பொருட்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Karaiyar ,Vikepuram ,Kumar ,Kuchilkadu ,Melanai ,Papanasam ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை