- சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- சோழவந்தான்
- காரைக்குடி
- திருவைகுண்டம்
- சென்னை காயிதே மில்லத் அரசு...
சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, சோழவந்தான், காரைக்குடி, திருவைகுண்டம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் ரூ.12 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள விளையாட்டு அரங்கங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி அருகில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி கூடம், 400 மீட்டர் நீள தடகள பாதை, பார்வையாளர் இருக்கைகளுடன் கூடிய ஹாக்கி மைதானம், 2 கிரிக்கெட் பயிற்சி மைதானங்கள் அடங்கிய சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கான ‘முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை’ திறந்து வைத்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக மதுரை மாவட்டம் – சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் ரூ.3 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 200 மீட்டர் தடகள ஓடுபாதை, திறந்தவெளி கூடைப்பந்து, கையுந்துபந்து, கபாடி, கோ-கோ மைதானங்கள், நீளம் தாண்டுதல் பாதை, பார்வையாளர் மாடத்துடன் கூடிய முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் – காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 400 மீ தடகள ஓடுபாதை, திறந்தவெளி கூடைப்பந்து, கையுந்துபந்து, கபாடி, கோ-கோ ஆடுகளங்கள், நீளம் தாண்டுதல் பாதை, பார்வையாளர் மாடத்துடன் கூடிய முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கத்தை திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் – ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 400 மீ தடகள ஓடுபாதை, கால்பந்து மைதானம், கையுந்துபந்து ஆடுகளம், நீளம் தாண்டுதல் பாதை, பார்வையாளர் மாடத்துடன் கூடிய முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள்பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், பி.மூர்த்தி, எம்பி தயாநிதி மாறன், எம்எல்ஏக்கள் ஆ.வெங்கடேசன், ஊர்வசி அமிர்தராஜ், எம்.சி.சண்முகையா, எஸ்.மாங்குடி, காரைக்குடி மேயர் முத்துத்துரை, சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் சிற்றரசு, விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி உள்பட 4 தொகுதிகளில் ரூ.12 கோடியில் விளையாட்டு அரங்கம் திறப்பு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.
