×

ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் ஏட்டு தற்கொலை

ஈரோடு: வேலூர் மாவட்டம் வசந்தநடை பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (36). இவர், ஈரோடு மாவட்ட ஆயுதப்படை பிரிவில் ஏட்டாக பணியாற்றி வந்தார். சமீபத்தில்தான் திருப்பூரில் இருந்து இங்கு பணியிட மாற்றம் பெற்று வந்தார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் ஓட்டுநர் பணியை முடித்து விட்டு ஈரோடு ஆயுதப்படை குடியிருப்பு வீட்டில் ஓய்வெடுக்க சென்றார். நேற்று மாலை அவரது தந்தை நடராஜன் செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டும் போனை எடுக்காததால் ஆயுதப்படை அலுவலக பிரிவுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ்காரர் சென்று பார்த்தபோது நவீன்குமார் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் ஏட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Erode ,Naveen Kumar ,Vellore district ,Erode District Armed Forces Unit ,Tiruppur ,Sangeetha ,Armed Forces ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...