×

பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை பலி

தஞ்சாவூர்: பாலூனை விழுங்கிய 7 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருவோணம் தாலுகா ஊரணிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(35). இவரது மனைவி சிவகாமி(30). இவர்களது 7 மாத ஆண் குழந்தைக்கு நேற்றுமுன்தினம் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. பெற்றோர் குழந்தையை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். குழந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்தவர்கள், சந்தேகத்தின் பேரில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று எடுத்து சென்றனர். பிரேத பரிசோதனை செய்த போது குழந்தையின் வயிற்றில் பலூன் இருந்தது தெரியவந்தது. அதை அகற்றிய டாக்டர்கள், பலூனை விழுங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்ததாக கூறியுள்ளனர். இதுகுறித்து திருவோணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Satishkumar ,Uranipuram ,Thiruvonam taluka ,Orathanadu ,Thanjavur district ,Sivagami ,
× RELATED சென்னை குடிநீர் ஏரிகளில் 95.01% நீர் இருப்பு