×

சத்தியம் வெல்லும்; நாளை நமதே: பிரேமலதா விஜயகாந்த்


சென்னை: சத்தியம் வெல்லும்; நாளை நமதே! என்று விஜயகாந்தின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விஜயகாந்தின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியான பதிவில் #DMDKforTN என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக நாங்கள் கூறவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில் விஜயகாந்தின் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பதிவுசெய்யப்பட்ட போஸ்ட் சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தர கூட்டணி பேச்சுவார்த்தையின் போது ஒப்பந்தம் போடப்பட்டதாக பிரேமலதா கூறியிருந்தார். தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் என்று நாங்கள் சொன்னோமா? என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார்.

The post சத்தியம் வெல்லும்; நாளை நமதே: பிரேமலதா விஜயகாந்த் appeared first on Dinakaran.

Tags : Premalatha Vijayakanth ,Chennai ,Vijayakanth ,Temuthiga ,Rajya Sabha ,
× RELATED உயர் நீதிமன்ற உத்தரவை என்எல்சி...