×

கவிஞர் நந்தலாலா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்: செல்வப்பெருந்தகை!

சென்னை: கவிஞர் நந்தலாலா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள இரங்கல் செய்தில் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் பட்டிமன்றப் பேச்சாளருமான கவிஞர் நந்தலாலா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மேடைகளில் முழங்கியவர். அவருக்கே உரிய நகைச்சுவை மற்றும் சீரிய சிந்தனைகளாலும் தொலைக்காட்சிகளில் பகுத்தறிவு கருத்துக்களையும், அறிவுப்பூர்வமான சிந்தனைகளையும் மக்களிடையே கொண்டு சென்றவர். இவரின் மறைவு இயல், இசை, நாடகத்துறைக்கு ஈடு செய்யமுடியாத இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக நண்பர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.

 

The post கவிஞர் நந்தலாலா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்: செல்வப்பெருந்தகை! appeared first on Dinakaran.

Tags : Nandalala ,Selvapperunthakai ,Chennai ,Tamil Nadu Congress Committee ,President ,Tamil Nadu Progressive Writers and Artists Association… ,
× RELATED செல்வப்பெருந்தகை தாக்கு முரண்பாடுகளின் மொத்த வடிவம் பாஜ – அதிமுக கூட்டணி