×

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் இல்லையா?.. பாஜகவுடன் கூட்டணியா?: எடப்பாடி பழனிசாமி பதில்!!

சென்னை: தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக நாங்கள் கூறவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே கையெழுத்திடப்பட்டு உறுதி செய்யப்பட்டு விட்டதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்த நிலையில், தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் வழங்குவதாக நாங்கள் எப்போது கூறினோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்;

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் இல்லை?: எடப்பாடி பழனிசாமி
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக நாங்கள் கூறவில்லை. நாடாளுமன்றத் தேர்தலின்போது தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக எந்த முடிவும் எட்டப்படவில்லை. தேவையின்றி யார் யாரோ சொல்வதை வைத்து என்னிடம் கேட்க வேண்டாம். தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் என்று நாங்கள் சொன்னோமா? என எடப்பாடி கேள்வி எழுப்பினார். தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தர ஒப்பந்தம் போடப்பட்டதாக பிரேமலதா கூறியிருந்த நிலையில் செய்தியாளர்கள் கேள்விக்கு எடப்பாடி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணியா?: எடப்பாடி பழனிசாமி மழுப்பல்
பாஜகவுடன் கூட்டணி இருக்குமா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, திமுக மட்டுமே தங்களுக்கு எதிரி என எடப்பாடி பழனிசாமி பதில் கூறினார். 6 மாதம் கழித்து கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். எஸ்.பி.வேலுமணி இல்ல விழாவில் பாஜக தலைவர்கள் பங்கேற்ற நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமையலாம் என பேச்சு எழுந்தது. திமுகவை வீழ்த்துவது மட்டுமே எங்களின் இலக்கு. தொகுதி மறுவரையறை குறித்து நாளை அனைத்துக் கட்சி – கூட்டத்தில் எங்கள் கருத்தை தெரிவிப்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

The post தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் இல்லையா?.. பாஜகவுடன் கூட்டணியா?: எடப்பாடி பழனிசாமி பதில்!! appeared first on Dinakaran.

Tags : DMDK ,Rajya Sabha seat ,BJP ,Edappadi Palaniswami ,Chennai ,AIADMK ,General Secretary ,Dinakaran ,
× RELATED உயர் நீதிமன்ற உத்தரவை என்எல்சி...