×

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக ஒன்றிய அரசு அமைத்த மேற்பார்வை குழுவின் முதல் கூட்டம் மார்ச் 22-ல் நடக்கிறது

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக ஒன்றிய அரசு அமைத்த மேற்பார்வை குழுவின் முதல் கூட்டம் மார்ச் 22ம் தேதி நடைபெற உள்ளது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட மேற்பார்வை குழு அமைக்கப்பட்டுள்ளது. குமுளியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு மற்றும் கேரள அரசு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்பர்.

The post முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக ஒன்றிய அரசு அமைத்த மேற்பார்வை குழுவின் முதல் கூட்டம் மார்ச் 22-ல் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Union Government ,Mullaperiyar Dam ,Delhi ,National Dam Safety Authority ,Anil Jain… ,Dinakaran ,
× RELATED பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மேலும் ரூ.2 உயர்த்தியது ஒன்றிய அரசு..!!