புதுக்கோட்டை, மார்ச் 4: புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது; பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 580 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகள் நலவாரிய திட்டத்தின்கீழ், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,00,000 மதிப்புடைய விபத்து மரணத்திற்கான உதவித்தொகையும் மற்றும் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,53,000 மதிப்புடைய ஈமச்சடங்கு இயற்கை மரணத்திற்கான உதவித்தொகையும் மற்றும் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16,000 மதிப்புடைய நலவாரிய கல்வி உதவித்தொகையும் என ஆகமொத்தம் 17 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,69,000 மதிப்புடைய பல்வேறு அரசு நலத்திட்ட உதவித் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டது எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தெரிவித்தார்.
மேலும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டதனடிப்படையில், பொன்னமராவதி வட்டாட்சியர். சாந்தாவுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர், பரிசு கோப்பையினை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி).அப்தாப் ரசூல்,, மாவட்ட வருவாய் அலுவலர்.ராஜராஜன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது).முருகேசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்).ஷோபா, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
The post புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 580 கோரிக்கை மனுக்கள்குவிந்தன appeared first on Dinakaran.
