×

வெள்ளப்பள்ளம் வானவன் மகாதேவி ஊராட்சியில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து திமுக பிரச்சாரம்

 

வேதாரண்யம், மார்ச் 4: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் வெள்ளப்பள்ளம் வானவன் மகாதேவி ஊராட்சியில் திமுக கொடி ஏற்றி, மும்மொழி கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றிய கழக இளைஞரணி சார்பில் திமுக கொடியேற்று விழா நடைபெற்றது. பின்பு பாஜக மோடி அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் திவாகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும், துண்டு பிரசுரம் வழங்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக பொருளாளர் மாரியப்பன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வீரசேகரன், திமுக நிர்வாகிகள் ராம்சிங், மாரிமுத்து, ராஜமாணிக்கம், தங்கவேல், சுப்பிரமணியன், தமிழ் வேல் சுதாகர், துரைசாமி, முத்துக்குமரன், கணேசன், காளிமுத்து, சக்தி, சம்பத், கிளைக் கழக பிரதிநிதிகள் செங்குட்டுவன், பன்னீர்செல்வம், ஜெய்சங்கர், மணிகண்டன், விஜயகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெற்றிவேல், கோவில்பத்து முன்னாள் கவுன்சிலர் மாசிலாமணி மற்றும் பிரித்திவிராஜ், பால.பார்த்திபன், இளைஞரணி குப்புசாமி, கார்த்தி, கோபி, கலையரசன், ஜோதி, பாசு மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர். பாக முகவர் குணசேகரன் நன்றி கூறினார்.
அதனைத் தொடர்ந்து கோவில்பத்து ஊராட்சியில் ஒன்றிய கழக அவைத் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் மும்மொழி திட்டத்தை எதிர்த்து கண்டன முழக்கம் எழுப்பினர்.

 

The post வெள்ளப்பள்ளம் வானவன் மகாதேவி ஊராட்சியில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து திமுக பிரச்சாரம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Vellapallam Vanavan Mahadevi panchayat ,Vedaranyam ,Vellapallam Vanavan ,Mahadevi ,Vellapallam taluka ,Nagai ,Thalaignayiru panchayat ,panchayat ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி