×

தாராபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரோஜா மலர் கொடுத்து வாழ்த்து

 

தாராபுரம், மார்ச் 4: தமிழ்நாடு முழுவதும் நேற்று 12ம் வகுப்பு தேர்வு துவங்கியது பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் தேர்வினை எழுத தேர்வு மையங்களுக்கு வருகை தந்தனர். தாராபுரம் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வு எழுத வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ரோஜா மலர்களை வழங்கி மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தி தேர்வினை அச்சமின்றி எதிர்கொள்ள ஆலோசனைகளை வழங்கினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் தாராபுரம் நகராட்சி என்சிபி மேல்நிலைப் பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் பரக்கத் நிஷா, நகர்மன்ற உறுப்பினர்கள் முபாரக் அலி, மொரட்டாண்டி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post தாராபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரோஜா மலர் கொடுத்து வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Tarapuram Municipal Higher Secondary School ,Tarapuram ,Tamil Nadu ,Tarapuram Municipal Higher Secondary School for Boys ,Dinakaran ,
× RELATED உடுமலை அடுத்த மைவாடி பகுதியில்...