- அம்மன் கோவில் மாசி மகம் திருவிழா
- சிங்கம்புணரி
- ருத்ரகோடீஸ்வரர் ஆத்ம நாயகி அம்மன் கோவில் மாசி மகம் திருவிழா
- குன்றக்குடி ஆதீனம்
- சதுர்வேத மங்கலம்
- சிவாச்சாரியர்கள்
- ஆத்ம நாயகி அம்மன் ருத்ர...
சிங்கம்புணரி, மார்ச். 4: சிங்கம்புணரி அருகே சதுர்வேத மங்கலத்தில் குன்றக்குடி ஆதீனத்திற்கு உட்பட்ட ருத்ரகோடீஸ்வரர் ஆத்ம நாயகி அம்மன் கோயில் மாசி மக திருவிழா நேற்று கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இதில் காலை 10 மணிக்கு சிவாச்சாரியார்கள் ஆத்மநாயகி அம்மன் ருத்ர கோடீஸ்வரர் மற்றும் கொடி மரத்திற்கு சிறப்பு யாக பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் ரிஷப கொடியேற்றி தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு கட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாலையில் அரவன்கிரி என்னும் அரளிப்பாறையில் தண்டாயுதபாணி கோயிலில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவில் 5ம் நாள் திருக்கல்யாணம், 6ம் நாள் கழுவன் திருவிழாம், 7ம் நாள் பிச்சாண்டேஷ்வரர் புறப்பாடு, 9ம் திருவிழாவாக திருத்தேரோட்டம், 10ம் நாள் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது.தினமும் இரவில் நந்தி பூதம், குதிரை, யானை, ரிஷபம், கேடயம், உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் 10ம் நாள் ஐந்து நிலை நாடு சார்பாக அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நடைபெறும்.
The post சிங்கம்புணரி அருகே அம்மன் கோயில் மாசி மக திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம் appeared first on Dinakaran.