- கல்லாஹகர் கோயில்
- ஆணையாளர்
- மதுரை
- அழகர்கோயில்
- யக்ஞ நாராயண்
- உதவியாளர்
- குற்றாலம் திருக்குற்றாலநாதர் சுவாமி கோவில்
- துணை ஆணையாளர்
- தின மலர்
மதுரை, மார்ச் 4: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில், கடந்த 7 மாதங்களாக துணை ஆணையர் இல்லாமல், மண்டல இணை ஆணையர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்நிலையில் குற்றாலம் திருக்குற்றாலநாதர் சுவாமி கோயிலின் உதவி ஆணையராக இருந்த யக்ஞ நாராயணன் பதவி உயர்வு பெற்று, கள்ளழகர் கோயில் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கள்ளழகர் கோயிலில் நேற்று பொறுப்பேற்றார். அப்போது மண்டல இணை ஆணையர் செல்லத்துரை, கோயில் கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், பிரதீபா, அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், மீனாட்சி, ரவிக்குமார், அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் கோயில் சன்னதிகளில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். மேலும், நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறும் இடத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது அதிகாரிகள் அனைவரும் பக்தர்களுடன் சேர்ந்து உணவு அருந்தினர்.
The post கள்ளழகர் கோயில் துணை ஆணையர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.