×

அதிமுக மாஜி அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : 5 பேர் மீது வழக்குப்பதிவு!!

சென்னை : அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.பி அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்பான அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், பி.தங்கமணி ஆகிய அதிமுக முன்னாள் அமைச்சர்களை தொடர்ந்து தற்போது கே.பி.அன்பழகன் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் கே.பி.அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து,சென்னை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் 200க்கும் அதிகமான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கணேஷ் கிரானைட் அலுவலகம் உட்பட 3 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 41 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் கரிம்நகரில் உள்ள அன்பழகனும் சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. …

The post அதிமுக மாஜி அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : 5 பேர் மீது வழக்குப்பதிவு!! appeared first on Dinakaran.

Tags : Former ,AIADMK ,Minister ,K.P. ,Corruption Eradication Department ,Anbazagan ,Chennai ,KP ,Anbazhagan ,Dinakaran ,
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...