- ஆர்டிஓ
- சொக்கிகுளம், மதுரை
- மதுரை
- வடக்கு தாலுகா அலுவலகம்
- மதுரை ஆர்.டி.ஓ
- வருவாய் ஆணையர்) அலுவலகம்
- மதுரை மாவட்ட ஆட்சியகம்
- தல்லாகுளம் காவல் நிலையம்
- சொக்கிகுளம்…
- தின மலர்
மதுரை, மார்ச் 4: மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடக்கு தாலுகா அலுவலகம், மதுரை ஆர்டிஓ (வருவாய் கோட்டாட்சியர்) அலுவலகம் இயங்கி வருகிறது. இதில் வடக்கு தாலுகா அலுவலகத்திற்கு, சொக்கிகுளத்தில் உள்ள தல்லாகுளம் காவல் நிலையம் அருகே 70 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டு, ரூ.4.50 கோடி நிதியில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேநேரம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு தனி கட்டிடம் இல்லாததால், அங்கு, நிலம் தொடர்பான தகராறு, சட்டம் ஒழுங்கு பிரச்னை. சந்தேக மரணங்கள் விசாரணை, தாழ்த்தப்பட்டோர், சாதிச்சான்று, மணல் கடத்தல் உட்பட பல தேவைகளுக்காக வரும் மக்கள் இடப்பற்றாக்குறையால் சிரமப்பட்டு வருகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தல்லாகுளம் காவல் நிலையம் அருகில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்ய முடிவானது. தற்போது, தல்லாகுளம் காவல் நிலையம் அருகே தெற்கு பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, பொதுப்பணித்துறையிடமிருந்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்காததால், வருவாய் கோட்டாட்சியர் தரப்பில் திட்ட மதிப்பீடு தயாரித்து, வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பியுள்ளதாகவும், பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் நிதி பெறப்பட்டு அலுவலக கட்டுமான பணிகள் துவங்கும் எனவும், வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post மதுரை, சொக்கிகுளத்தில் ஆர்டிஓ அலுவலகத்தின் புதிய கட்டிடத்திற்கு இடம் தேர்வு appeared first on Dinakaran.