- போரூர்
- சிறப்பு உதவி ஆய்வாளர்
- செந்தில்குமார்
- திருமங்கலம் போக்குவரத்து காவல் நிலையம்
- அண்ணாநகர் மேற்கு பேருந்து நிலையம்
- திருமங்கலம் காவல் நிலையம்
- தின மலர்
போரூர், மார்ச் 4: திருமங்கலம் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் போக்குவரத்து போலீசார் நேற்று மதியம், திருமங்கலம் காவல் நிலையம் பின்புறம் உள்ள அண்ணாநகர் மேற்கு பஸ் டிப்போ அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் இருவர் அதிவேகமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது, பைக்கை நிறுத்துவது போல் நடித்து, திடீரென வேகமாக தப்பினர். அப்போது பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த நபர், சிறப்பு உதவி ஆய்வாளர் கையில் இந்த வாக்கி டாக்கியை பறித்து சென்றுக்கொண்டு, எங்களையே மடக்குவீர்களா… என கிண்டல் செய்தபடி மின்னல் வேகத்தில் தப்பினர். உடனே, போக்குவரத்து போலீசார், அவர்களை விரட்டி சென்றனர். ஆனால், அதற்குள் மர்ம நபர்கள் பைக்கில் தப்பி சென்றனர். இதுகுறித்து போக்குவரத்து உதவி ஆய்வாளர் செந்தில்குமார் திருமங்கலம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post வாகன தணிக்கையில் போலீசாரிடம் வாக்கி டாக்கி பறிப்பு appeared first on Dinakaran.