×

நத்தம் மாரியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

 

நத்தம், மார்ச் 4: நத்தம் மாரியம்மன் கோயிலில் மாசி பெருந்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசிப்பெருந் திருவிழா விமரிசையாக நடக்கும். இந்தாண்டு மாசித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோயில் முன் உள்ள கொடி மரத்தில் காலையில் அம்மன் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post நத்தம் மாரியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் appeared first on Dinakaran.

Tags : Natham Mariamman Temple ,Natham ,Masi Perundru festival ,Mariamman Temple ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி