குளத்தூர், மார்ச் 4: குளத்தூர் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் ைகது செய்தனர். குளத்தூர் எஸ்ஐ முத்துராஜா மற்றும் போலீசார், பனையூர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ரோந்து சென்றனர். இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் சந்தேகப்படும்படி நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அவர், தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 1வது தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் மாரிபெருமாள் என்ற மதன்குமார் (24) என்பதும், அடையாளம் தெரியாத நபரிடம் கஞ்சாவை வாங்கி வந்து சிறிய பொட்டலங்களாக பிரித்து விற்பதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், 150 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.
The post குளத்தூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.