கருங்கல், மார்ச் 4 : தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி வேதியியல் துறை சார்பில் தேசிய அறிவியல் தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே, பல்வேறு போட்டிகள் ”புதுமைகள் படைக்க, அறிவியல் ரீதியாக இளைஞர்களை தயார்படுத்துவோம்” என்ற தலைப்பில் நடைபெற்றன. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 12 பள்ளிகள் பங்கேற்றன. போட்டிகளை வேதியியல் துறைத் தலைவர் மேரி ஹெலன் துவக்கி வைத்தார் கல்லூரி முதல்வர் ஜே. ஜாண்சன், மற்றும் துணை முதல்வர் பிருந்தா வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்சிக்கான ஏற்பாடுகளை வேதியியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் சஜிதா மற்றும் அனைத்து பேராசிரியர்கள், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் இணைந்து செய்தனர். மேலும் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
The post அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் appeared first on Dinakaran.