×

தனியார் பஸ் கண்டக்டர், டிரைவர் மீது தாக்குதல்

பாகூர், மார்ச் 4: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சாத்திப்பட்டு வடக்கு வீதியை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன்(43). இவர் தனியார் பஸ்சில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2ம் தேதி மாலை புதுச்சேரி-கடலூர் வழித்தடத்தில் பஸ்சில் பணியில் இருந்துள்ளார். அப்போது கிருமாம்பாக்கம் அடுத்துள்ள அறுபடை வீடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி உள்ளார். அப்போது, பாகூர் பங்களா வீதியை சேர்ந்த ேஷர் ஆட்டோ டிரைவர் கிரி என்பவர், கொளஞ்சியப்பனிடம் இங்கு பயணிகளை ஏற்றி, இறக்க கூடாது என தகராறு செய்து, அவரையும், டிரைவர் பழனிச்சாமியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த பழனிச்சாமி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தனியார் பஸ் கண்டக்டர், டிரைவர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Bakur ,Kolanjiyappan ,Sathipattu North Road ,Panrutty ,Cuddalore district ,Puducherry-Cudalur route ,Kirumambakkam… ,Dinakaran ,
× RELATED பைக் மீது பேருந்து உரசியதில் வெல்டர் பலி