×

மீனவர்கள் கடத்தல்காரர்களா? அண்ணாமலைக்கு எஸ்டிபிஐ கண்டனம்

சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கோரி ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். மீனவர்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு செவிமடுக்காத நிலையில், திருவோடு ஏந்தும் போராட்டம், தீக்குளிப்பு போராட்டம் என அடுத்தடுத்த போராட்ட அறிவிப்புகளை மீனவர்கள் வெளியிட்டுள்ளனர்.

தமிழக மீனவர்களின் இந்தப் போராட்டத்தையும், மீனவர்களின் கோரிக்கைகளையும் திசை திருப்பும் வகையில், மீனவர்கள் கடத்தலில் ஈடுபடுகிறார்கள், அதனால்தான் இலங்கை கடற்படை கைது நடவடிக்கை மேற்கொள்கிறது என மிக அபாண்டமான அவதூறுகளை தெரிவித்துள்ள பாஜ தலைவர் அண்ணாமலையின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மீனவர்கள் கடத்தல்காரர்களா? அண்ணாமலைக்கு எஸ்டிபிஐ கண்டனம் appeared first on Dinakaran.

Tags : STBI ,Chennai ,STBI party ,president ,Nellai Mubarak ,Rameswaram Thangachimadam ,Union government ,
× RELATED அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி.ஐ....