×

வேலையின்மை, பணவீக்கம் மட்டுமே மோடி ஆட்சியில் உற்பத்தி ஆகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மோடி ஆட்சியில் வேலையின்மை, பணவீக்கம்,பொய்கள் மட்டுமே மொத்தமாக உற்பத்தி செய்யப்படுகிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது பேஸ்புக் பதிவில் , மோடி ஆட்சியில் பொருளாதார தோல்வி, வேலையின்மை, பணவீக்கம் மற்றும் பொய்கள் ஆகியவை மட்டுமே மொத்தமாக உருவாக்கப்படுகிறது. அநீதியான வரிகளை நீக்குதல், ஏகபோகத்தை ஒழித்தல், வங்கிகளின் கதவுகளைத் திறந்து, திறமையானவர்களுக்கு உரிமைகளை வழங்குதல் வேண்டும். பொருளாதாரத்தை மேம்படுத்துவது,வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் வலுவான இந்தியா உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

The post வேலையின்மை, பணவீக்கம் மட்டுமே மோடி ஆட்சியில் உற்பத்தி ஆகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi ,Rahul Gandhi ,New Delhi ,Lok Sabha ,Facebook ,
× RELATED டெல்லியில் உள்ள எய்ம்ஸ்...