- மோடி
- கிர் பூங்கா
- சாசன்
- குஜராத்
- தேசிய வனவிலங்கு தினம்
- கிர் வனவிலங்கு சரணாலயம்
- ஜுனாகத் மாவட்டம்
- தின மலர்
சாசன்: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஞாயிறன்று குஜராத் மாநிலத்திற்கு சென்றார். தேசிய வனவிலங்கு தினத்தையொட்டி நேற்று ஜூனகத் மாவட்டத்தில் உள்ள கிர் வனவிலங்கு சரணாலயத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு திறந்த ஜீப்பில் பயணம் செய்த அவர் சிங்கங்களை மிக அருகில் கண்டு ரசித்தார். மேலும் அவற்றை புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘நான் கிர் சபாரிக்கு சென்றேன். இது நாம் அனைவரும் அறிந்தபடி கம்பீரமான ஆசிய சிங்கங்களின் தாயகமாகும். கிர் நகருக்கு வருவது நான் குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது நாங்கள் கூட்டாக செய்த பணியின் பல நினைவுகளையும் மீண்டும் கொண்டு வருகின்றது.
கடந்த பல ஆண்டுகளில் கூட்டு முயற்சிகள் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கையை சீராக அதிகரித்து வருவதை உறுதி செய்துள்ளன. ஆசிய சிங்கங்களின் வாழ்விடத்தை பாதுகாப்பதில் பழங்குடி சமூகங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பெண்களின் பங்கும் பாராட்டத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சாசனில் நடந்த தேசிய வனவிலங்கு வாரியத்தின் கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்த ஆண்டு மே மாதம் மேற்கொள்ளப்படும் சிங்கங்கள் எண்ணிக்கை மதிப்பீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
The post கிர் பூங்காவில் திறந்த ஜீப்பில் பயணித்த பிரதமர் மோடி: சிங்கங்களை புகைப்படம் எடுத்து உற்சாகம் appeared first on Dinakaran.