×

விக்கிரவாண்டி சார்பதிவாளர் ஆபீசில் ரெய்டு ரூ.2 லட்சம் பறிமுதல்

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் பண பரிமாற்றம் அதிகளவு நடைபெறுவதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. முகூர்த்த நாளான நேற்று காலை முதல் பத்திரப்பதிவு மும்முரமாக நடைபெற்று வந்தது. தொடர்ந்து நேற்று மாலை விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையை சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் 2 ஜீப்களில் திடீரென சார் பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து சார் பதிவாளர் சூர்யா மற்றும் அலுவலக ஊழியர்களை மட்டும் உள்ளே வைத்து சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரூ.2,14,120 ரொக்க பணம் சிக்கியுள்ளது.

The post விக்கிரவாண்டி சார்பதிவாளர் ஆபீசில் ரெய்டு ரூ.2 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Vikravandi Sub-Registrar’s Office ,Vikravandi ,Villupuram Anti-Corruption Police ,Villupuram district ,Villupuram… ,Dinakaran ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை