இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி (பிடிஐ) தலைவர் இம்ரான் கான், தன்னை சிறையிலிருந்து மீட்டு ஜனநாயகத்தை காப்பாற்ற அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தலையிடக் கோரி கட்டுரை எழுதினார். இது குறித்து எதிர்க்கட்சிகளில் ஒன்றான அவாம் பாகிஸ்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஷாஹித் கக்கான் அப்பாஸி அளித்த பேட்டியில், ‘‘இம்ரான் விவகாரத்தில் அமெரிக்கா நிச்சயம் தலையிடாது. இம்ரான் கான் தான் செய்த தவறுகளை எண்ணிப் பார்த்து திருத்தி கொள்ள வேண்டும். அவரது கட்சியில் சீர்த்திருத்தம் செய்யப்பட வேண்டும். மாறி மாறி ஆட்சி அதிகாரத்தை வழங்கும் தேசத்தின் மனநிலை மாறினால் மட்டுமே இம்ரான் கானுக்கு நிவாரணம் கிடைக்கும்’’ என்றார்.
The post நாட்டின் முன்னேற்றத்திற்காக இம்ரான் கான் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்: பாக். எதிர்க்கட்சி தலைவர் அறிவுரை appeared first on Dinakaran.