×

மோடி அரசின் தங்கப் பத்திர திட்டம் முழுமையான தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பணமதிப்பிழப்பு, மேக் இன் இந்தியா முயற்சியைப் போலவே, மோடி அரசின் தங்கப் பத்திரத் திட்டம் ஒரு முழுமையான தோல்வி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: 2015 நவம்பரில் தங்கம் பணமாக்குதல் திட்டத்தின் கீழ் மோடி அரசால் சவரன் தங்கப் பத்திரத் திட்டம் தொடங்கப்பட்டது. மோடி அரசால் பெரும் ஆரவாரத்துடன் தொடங்கப்பட்ட இறையாண்மை தங்கப் பத்திரம் திட்டமானது பணமதிப்பிழப்பு மற்றும் மேக் இன் இந்தியா போன்ற ஒரு முழுமையான தோல்வி என நிரூபித்துள்ளது.

ஏனெனில் இந்த தங்க பத்திர திட்டம் 2023-24ம் ஆண்டுக்குள் ஒன்றிய அரசு 930 சதவிகிதம் கடனைப் பெறுவதற்கு வழிவகுத்துள்ளது. விலைவாசி உயர்வு, தனியார் முதலீடு குறைதல், ஊதியம் தேக்கமடைதல் போன்ற பிரச்சனைகள் சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கிறது. குறைந்த நுகர்வு செலவு மற்றும் சமத்துவமின்மை போன்ற பிரச்சனைகள் வெடித்துள்ளன. இந்த புதைகுழியில் இருந்து வெளியேறும் வழி, கொள்கை வகுப்பதில் கவனத்தை முதலாளித்துவத்தில் இருந்து மாற்றி கீழ்மட்ட அதிகாரமளிப்புக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் கிராமப்புறத்தில் வருவாயை பெருக்குவதில் தொடங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post மோடி அரசின் தங்கப் பத்திர திட்டம் முழுமையான தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi government ,Congress ,New Delhi ,Make in India ,general secretary ,Jairam Ramesh ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு,...