- வஞ்சேரி ஜிஎஸ்டி ரோட்
- உத்தரவாஞ்சேரி
- மாத்ரவஞ்சேரி ஜிஎஸ்டி சாலை
- திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை
- வஞ்சேரி ஜிஎஸ்டி ரோட்
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படும் பேருந்து நிழற்குடையை அகற்றி புதிய பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரை பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையான கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் உள்ள மின்வாரியம் அலுவலகம் அருகே, கடந்த 2013ம் ஆண்டு செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ₹3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது. அப்போது செங்கல்பட்டு எம்எல்ஏவாக தேமுதிக கட்சியை சேர்ந்த அனகை முருகேசன் பதிவி வகித்து வந்தார். தற்போது, இந்த பேருந்து நிழற்குடையில் பயணிகளின் இருக்கை தரை மற்றும் ஜன்னல்கள் வெடிப்புகள் விட்டு ஆங்காங்கே இடிந்து விழுந்து அந்தரங்கத்தில் தொங்குகிறது.
பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் ஆபத்தை உணராமல் பேருந்து நிழற்குடையின் உள்ளே காத்திருக்கின்றனர். மேலும், ேபருந்து நிழற்குடையில் சில மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எந்நேரமும் படுத்து தூங்குகின்றனர். ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் கட்டமைப்பு செய்யப்படாமல் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிழற்குடை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து விழும் என்பதால், ஏதாவது ஆபத்து நேர்ந்து விடுமோ என்று அப்பகுதிமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதுகுறித்து செங்கல்பட்டு கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள பேருந்து நிழற்குடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் சேதமடைந்த நிழற்குடை பொதுமக்கள்அச்சம் appeared first on Dinakaran.