- யூனியன்
- அமைச்சர்
- மகாராஷ்டிரா
- ஜல்கான்
- ஒன்றியம் இளைஞர் நல
- விளையாட்டு அமைச்சர்
- ரக்ஷா கட்ஸே
- மக்களவை
- பாஜக
- ஜல்கான் முக்தாய் நகர்
- மத்திய அமைச்சர்
- தின மலர்
ஜல்காவ்: ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை பெண் அமைச்சர் ரக்ஷா கட்சே. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பாஜ சார்பில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். இவர், ஜல்காவ் முக்தாய் நகர் போலீசில் நேற்று புகார் ஒன்றை அளித்தார். அதன்பிறகு அவர் கூறியதாவது: முக்தாய் நகர் கோதலி கிராமத்தில் முக்தாய் யாத்ரா நடந்தது. இதில் என் மகள் கலந்து கொண்டார். அங்கு எனது மகள் மற்றும் அவரது தோழியை பின் தொடர்ந்த சில வாலிபர்கள், போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். எனது ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த வாலிபர்கள் தவறாக நடந்து கொண்டனர்.
இதையடுத்து அங்கு பெரும் கூட்டம் கூடியுள்ளது. இதுகுறித்து எனது மகள் என்னிடம் தெரிவித்தார். இதே கும்பல் கடந்த 24ம் தேதியன்று ஜல்காவில் நடந்த நிகழ்ச்சியில் பொது இடத்தில் வைத்து தன்னிடமும், தனது தோழிகளிடமும் சீண்டலில் ஈடுபட்டதாகவும் என் மகள் தெரிவித்தார். இதே கும்பல், முக்தாய் நகரில் பள்ளிக்கு செல்லும் சிறுமிகளுக்கு தொல்லை கொடுத்து வருவதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே இதுபற்றி போலீசில் புகாரளித்தேன். முதல்வர் மற்றும் போலீஸ் டிஎஸ்பியை சந்தித்து பேசவுள்ளேன். இவ்வாறு கூறினார்.
இது தொடர்பாக அனிகெத் போய், பியூஷ் மோரே, சாஹம் கோலி, அனுஜ் பாட்டீல், கிரண் மாலி மற்றும் சச்சின் பால்வி உள்ளிட்ட வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.
The post மகாராஷ்டிராவில் ஒன்றிய பெண் அமைச்சர் மகளுக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது; 6 பேருக்கு வலை appeared first on Dinakaran.
