- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- தமிழ்நாடு காங்கிரஸ்
- கிரிஸ் சோதங்கர்
- சென்னை
- கிரீஸ் சோதங்கர்
- சத்தியமூர்த்தி
- பவன்
- தமிழ்நாடு காங்கிரஸ் குழு
- ராயப்பேட்டை, சென்னை
- இங்கிலாந்து
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிரீஸ் சோடங்கர் நேற்று வருகை தந்தார். அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மாநில தலைப்புச் செயலாளர் ராம் மோகன், மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ். திரவியம், சிவராஜசேகரன், முத்தழகன், டில்லி பாபு மற்றும் மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் சூலை ராஜேந்திரன், சந்திரசேகர், எஸ்சி துறை மாநில பொதுச் செயலாளர் மா.வே. மலையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து முன்னாள் மாநில தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தேசிய செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கேஎஸ் அழகிரி, கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், கோபிநாத், விஷ்ணு பிரசாத், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேசிய செயலாளர்கள் விஸ்வநாதன், கோபிநாத் கிறிஸ்டோபர் திலக், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், கருமாணிக்கம், ஊர்வசி அமிர்தராஜ், பிரின்ஸ், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு முன்னதாக மேலிட பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய பாஜ அரசு கல்வியை காவி மயமாக்க துடிக்கிறது. இன்றைய மக்களும், இளைஞர் சமுதாயமும் தங்களுக்கு என்ன தேவையோ அதனை அவர்கள்தான் முடிவு எடுக்க முடியுமே தவிர மோடியோ, அமித்ஷாவோ அல்ல. ஒரு தனிப்பட்ட மொழி திணிப்பை என்றும் நாங்கள் எதிர்ப்போம். ஒன்றிய அரசை பொருத்தவரை அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க நினைக்கிறது. தொகுதி மறு சீரமைப்பு மூலம் தென்னிந்தியாவை தண்டிக்க நினைக்கிறார்கள்.
மோடி சர்வாதிகாரி போல செயல்படுகிறார். கல்வியில் பிரித்தாளும் சூழ்ச்சியை ஒன்றிய அரசு செய்கிறது. தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதியை விடுவிக்க முடியாதென்று சொல்ல அந்த பணம் தர்மேந்திர பிரதான் பணம் அல்ல. இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய செல்வப்பெருந்தகை, பீகாரில் வெற்றி பெற முடியாத பிரசாந்த் கிஷோரின் வியூகம் தமிழ்நாட்டில் எடுபடாது. பெண்களுக்கு எதிராக பேசும் சீமானை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டிக்கிறது என்றார்.
The post கல்வியில் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து வருகிறது ஒன்றிய அரசு: தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
