×

நங்கநல்லூர் பிரின்ஸ் பள்ளி ஆண்டுவிழாவில் தேசத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் மாணவர்களிடம் உள்ளது: முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் பேச்சு

சென்னை: சென்னை நங்கநல்லூரில் பிரசித்தி பெற்ற பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 47வது ஆண்டு விழா மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, கல்வி குழுமத் தலைவர் டாக்டர் கே.வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர்கள் டாக்டர் வா.விஷ்ணு கார்த்திக், வா.பிரசன்ன வெங்கடேஷ், செயலாளர் வா.ரஞ்சனி வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.பாலா ஆண்டறிக்கை வாசித்தார்.

இவ்விழாவில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், மாநில கல்லூரி புள்ளியியல் துறைத் தலைவர் டாக்டர் என்.விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, பள்ளியின் சார்பில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகைகளை வழங்கி பாராட்டினர். இதில் முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் பேசுகையில், குழந்தைகளுக்கு கல்வியைவிட ஒரு சிறந்த பரிசு வேறு எதுவும் இல்லை.

உங்களின் உயரிய லட்சியங்களை கடுமையாக உழைத்து அடைய வேண்டும். நம் தேசத்தின் வளர்ச்சியும், முன்னேற்றமும் ஒவ்வொரு மாணவர்களின் கரங்களில்தான் உள்ளது. இதை நீங்கள் அனைவரும் நன்கு உணர்ந்து, பொறுப்புடன் செயல்பட்டு அனைவருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். இதில், அப்பள்ளியின் கல்வி ஆலோசனை குழு உறுப்பினர்கள் கே.பார்த்தசாரதி, முனைவர் எஸ்.ரகு, மு.தருமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நங்கநல்லூர் பிரின்ஸ் பள்ளி ஆண்டுவிழாவில் தேசத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் மாணவர்களிடம் உள்ளது: முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Prince's School of Nanganallur ,Former ,Judge ,D. N. VALLINAYAKAM ,Chennai ,47th Anniversary ,Ceremony ,Prince Matriculation Secondary School ,Nanganallur, Chennai ,Dr. ,K. ,Vasudevan ,Vice ,Vishnu Kartik ,Va. Prasanna ,Nanganallur ,D. N. Vallinayagam ,
× RELATED நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை விதிப்பு!!