- திமுக அரசு
- கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம்
- சென்னை
- தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம்
- Ponkumar
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் 40வது வாரியக் கூட்டம் சென்னையில் நடந்தது.
இதில் கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் பேசியதாவது:
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் துவங்கப்பட்ட 30.11.1994 முதல் ₹2266.22 கோடியில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டு கால திமுக ஆட்சிக் காலத்தில் 13,79,672 தொழிலாளர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டதுடன் 17,76,380 பயனாளிகளுக்கு ₹1,402 கோடி உதவி தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், தொழிலாளர் ஆணையர் சி.அ.ராமன், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய செயலாளர் க.ஜெயபாலன், அரசு தரப்பு பிரதிநிதிகள், வேலையளிப்பவர் தரப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
The post திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை 17.76 லட்சம் பேருக்கு ₹1,402 கோடி உதவித்தொகை: கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் தகவல் appeared first on Dinakaran.