- அண்ணாமலை பல்கலைக்கழகம்
- சிதம்பரம்
- பிரபாகரன்
- பெரிய காஜியார் தெரு, சிதம்பரம், கடலூர் மாவட்டம்
- கசுகடை தெரு
- பாலசந்திரன்
- நடு பிள்ளை தெரு, சிதம்பரம்
- மருந்தியல் துறை
- சிதம்பரம்...
சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் பெரிய காஜியார் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்(29). இவர் காசுக்கடை தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். சிதம்பரம் நாட்டு பிள்ளை தெருவை சேர்ந்தவர் பாலச்சந்திரன்(47). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பார்மசி துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு பிரபாகரனின் மளிகை கடைக்கு பாலச்சந்திரன் சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு, அதற்கு பணம் கொடுக்காமல் மறந்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து வாங்கிய பொருட்களுக்கு பணத்தை கொடுக்கும்படி பிரபாகரன் கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். தடுக்க வந்த பிரபாகரன் மனைவியை பாலச்சந்திரன் எட்டி தள்ளியதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னையில் கீழே விழுந்த பாலசந்திரனுக்கும் தலையில் அடிபட்டுள்ளது. பின்னர் ஆத்திரம் அடங்காமல் பாலச்சந்திரன் வீட்டிற்கு சென்று தனது காரை ஓட்டி வந்து கடை மீது இடித்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளார். காரை இரண்டு முறை முன்னும் பின்னுமாக இயக்கி உள்ளே இருப்பவர்கள் அலறும்போதே காரை ஏற்றி கடையை சேதப்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் பிரபாகரன், அவரது மனைவி சினேகா, கடை ஊழியர் ரவி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
காரை கடையின் முன்பக்க பகுதியில் மோதியபோது, அங்கிருந்த சிலர் இரும்பு கம்பியை எடுத்து காரின் கண்ணாடியை உடைத்து பாலச்சந்திரனை தாக்கினர். மேலும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் காரை தடுத்து நிறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் வந்து விசாரணை நடத்தினர். காரை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். பிரபாகரன் கொடுத்த புகாரின்பேரில் பாலச்சந்திரன் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலச்சந்திரன் தற்போது புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், சிகிச்சை முடிந்த பிறகு அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. இதனிடையே மளிகை கடை மீது காரால் மோதும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The post பொருட்களுக்கு காசு கேட்பீயா? காரால் ஒரே இடி…கடை குளோஸ்: அண்ணாமலை பல்கலை பேராசிரியருக்கு தர்மஅடி; வீடியோ வைரல் appeared first on Dinakaran.