புதுடெல்லி: மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட 2 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இக்குழு கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ஒன்றிய சட்ட அமைச்சகம் விரிவான பதில் அளித்துள்ளது.
அதில், மின்னணு வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து அடிக்கடி சந்தேகம் ஏற்படுவதால் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப குழுவின் சில உறுப்பினர்கள் பரிந்துரை செய்திருந்தனர். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள சட்ட அமைச்சகம், இத்தகைய பரிந்துரை செய்வது நாடாளுமன்ற குழுவின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மக்களவைக்கும் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது ஜனநாயக விரோதமானது அல்ல என்று தெரிவித்துள்ளது.
The post நாடாளுமன்ற குழு கேள்வி மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற திட்டமா..? சட்ட அமைச்சகம் பதில் appeared first on Dinakaran.