×

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் பாஜக சதி.. தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும்: ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை!!

ஹைதராபாத்: தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என்று ஒன்றிய அரசுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரேவந்த் ரெட்டி கூறியதாவது; தொகுதி மறுசீரமைப்பு மூலம் பிஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் தொகுதிகளை அதிகரித்து, நிரந்தர அதிகாரத்தை பெற பாஜக முயற்சி செய்கிறது. தென்மாநிலங்களின் தொகுதி குறையாது என்றே அமித்ஷா கூறுவதாகவும், எத்தனை தொகுதிகள் அதிகரிக்கப்படும் என்று அவர் கூறவில்லை.

தற்போதுள்ள விகிதாச்சாரப்படி தொகுதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். வெற்றிகரமாக மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை பலவீனப்படுத்த பாஜக சதி செய்கிறது. தெற்கில் தாங்கள் காலூன்றாததால், தென்மாநிலங்களை அரசியல் மற்றும் நிதி ரீதியாக பலவீனப்படுத்த பாஜக சதி செய்வதாகவும், அதனை தடுக்க வேண்டுமெனவும் ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டினார். தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு, கர்நாடகாவை தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் பாஜக சதி.. தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும்: ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Ravant Reddy ,Hyderabad ,Telangana ,Revand Reddy ,EU government ,Revant Reddy ,Bihar ,Madhya Pradesh ,Rajasthan ,Uttar Pradesh ,Bhajaka Sathi ,
× RELATED தெலங்கானா அரசுக்கு ராஷ்மிகா கடும் எதிர்ப்பு: பாஜ தூண்டுதலா?